Disqus Shortname

உத்திரமேரூர் பகுதியில் இன்டர்நெட் சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதால் அரசு, தனியார் நிறுவனங்கள் அவதி


உத்திரமேரூர் ஆக,30
உத்திரமேரூர் பகுதியில் அரசு நிறுவனங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல உள்ளது. இங்கு பெரும்பாலான பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இன்டர்நெட் சேவை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக இன்டர்நெட் சேவை அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து கருவேப்பம்பூண்டி, மாகரல் வழியாக இன்டர்நெட் இணைப்பு வருகிறது. சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப்படும் பள்ளங்களால், இணையதள வயர்கள் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. மேலும், உத்திரமேரூர் பிஎஸஎன்எல் அலுவலகத்தில் உள்ள இணையதள லிங்க் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ள அறையில் குளிர்சாதனம் இல்லை. இதனால், அந்த கருவி மிகவும் சூடேறி நின்றுவிடுகிறது. இந்த கருவி உள்ள அறையில் குளிர் சாதனப்பெட்டி கடந்த 5 மாதத்திற்கு மேலாக பழுதாகியுள்ளது. இதனால், இணையதள சேவை பாதிப்படைவதாக பிஎஸ்என்எல் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments