Disqus Shortname

உத்திரமேரூரில் இன்று தீமிதி திருவிழா

உத்திரமேரூர் ஆக, 16
    உத்திரமேரூர் ஸ்ரீ நுாக்கலம்மன் ஆலய 26-ம் ஆண்டு தீமிதி திருவிழா 16ம்  தேதி இன்று வெள்ளிக்கிழமையன்று நடக்கிறது. காலை 10 மணிக்கு நங்கையர் குளத்தில் இருந்து ஜலம் திரட்டி வந்து பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 1 மணிக்கு ஆலய அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்குகிறார்கள் மாலை 6 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து தீமிதிக்கிறார்கள் இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவிற்க்கான ஊற்பாடுகளை ஆலய நிர்வாகி து.ரமேஷ் மற்றும் விழாக்குழுவினர்  செய்து வருகின்றனர்.