Disqus Shortname

சாணஎரிவாயு செய்முறை உத்தரமேரூர் மாணவி சி.கலையரசி முதலிடம்

உத்தரமேரூர் ஆக -03

இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.  அறிவியல் கண்காட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சார்ந்த
200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.  கண்காட்சியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன் துவக்கிவைத்தார். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.  மாணவர்கள் தங்கள் படைப்புகளை மிகவும் பொருட்செலவுடன்
செய்திருந்தனர்.  சூரிய அடுப்பு, சூரிய மின்கலம், புவி வெப்பமடைதல், சாண எரிவாயு, தொழிற்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடடைவது போன்ற பல்வேறு காட்சிப் பொருள்கள் அனைவரையும் கவர்ந்திழுத்தது. உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு 8-ம் வகுப்பு மாணவி சி.கலையரசி செய்திருந்த சாணஎரிவாயு செயல்முறை கண்காட்சி பொருள் முதலிடத்தை பெற்றது. உத்தரமேரூர் பாலர்நேசன் நடுநிலைப்பள்ளி மாணவர் த.கீதா புவி வெப்பமடைதல் மாதிரி 2-ம் இடத்தைப் பெற்றார்.  காவனூர் புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சூரிய மின்கலம் செயல்முறை மூன்றாமிடம் பெற்றது.  மேலும் உத்தரமேரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நான்கு பள்ளிகள் ஆறுதல் பரிசையும்,
உத்தரமேரூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் முதல் மூன்று இடங்களையும், நான்கு ஆறுதல் பரிசுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.  மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில அளவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.