Disqus Shortname

புல்லம்பாக்கத்தில் அம்மா திட்ட முகாம் 82 மனுக்கள் தீர்வு

உத்தரமேரூர் ஆக,07  


உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் புல்லம்பாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்கிழமையன்று நடந்தது. உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்றார். ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள், முதியோர் உதவி தொகைக்கான உத்தரவுகளை வழங்கி பாராட்டி பேசினார்.  இம்முகாமில் 112 மனுக்கள் பெறப்பட்டது, 82 மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 17 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும் கிளக்காடி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 92 மனுக்கள் பெறப்பட்டதாகவும் 35 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 45 மனுக்கள் தள்ளுபடி 9 மனுக்கள்  நிலுவையில் உள்ளதாகவும் உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி தெரிவித்தார். இம்முகாமில் அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திருவந்தவார் முருகன், வயலக்காவூர் கூட்டுறவு சங்கத்தலைவர் பெருமாள், புலிவாய் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர். ஏகாம்பரம், ஒன்றிய  மாணவர் அணி துணைச்செயலாளர் ஆதவப்பாக்கம் எஸ்.கோதண்டன், இம்முகாமில் புல்லம்பாக்கம் ஊராட்சி  செயலாளர்  வி.கண்ணபிரான், ஒன்றிய பாசறை இணைச்செயலாளர் வி.இராமன், புத்தளி, ஊராட்சி மன்றத்தலைவர் குணசேகரன், புலிவாய் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜ்குமார் படூர் கூட்டுறவு சங்கத்த்லைவர் செல்வகுமரன், மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற தலைவர் டி.எம். சடையாண்டி வயலக்காவூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஸ்ரீதேவி சங்கர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பி.நீதி மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பி.வில்வபதி நன்றி கூறினார்.