Disqus Shortname

பழவேரி கிராமத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசு மாடுகள் வழங்கும் விழா

உத்திரமேரூர் ஆக, 26
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் பழவேரி கிராமத்தில் 50 பயனாளிகளுக்கு கறவை பசுமாடுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பழவேரி ஊராட்சி மன்றத்தலைவர் கோமளாகோவிந்தராஜன் வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகித்தனர் இவ்விழாவில் கால் நடை துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுமாடுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன் பேசும் போது இதுவரை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 12 ஆயிரத்து 23 ஆடுகள் ஆயிரத்து முன்னுாறு பசுமாடுகளும் வழங்கப்பட்டுள்ளது. பசு மாடுகளுக்கு எந்த  தீவனங்கள் வாங்கினால் பால் உற்பத்தி பெருகும் என்று வெட்னரி டாக்டர். பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்  வாழ்த்தி பேசினார். துணை சேர்மென் அ.ரவிசங்கர்  மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுசீலன் கால்நடை மருத்துவர்கள் சுரேந்தர், கே.வனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.  உதவி இயக்குனர்  இராஜன் சி.ஆண்டனி நன்றி கூறினார்.

No comments