Disqus Shortname

உத்தரமேரூர் பொதுமக்கள் கோரிக்கை

உத்தரமேரூர் ஆக. 21:
உத்தரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள உலக பிரசித்திப்பெற்ற பஜார் வீதியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் குடஓலை மூலம் தேர்தல் நடைபெற்ற கல்வெட்டுக் கோவில் அருகில் கழிவுநீர் கல்வாய் உள்ளது, இந்த கால்வாய்க்கு தடுப்பு கம்பிகள் இருந்தது, 2012 ல் துார்வாரும் பணிக்காக தடுப்பு கம்பிகளை அகற்றினர், ஆனால் மீண்டும் அந்த  தடுப்பு கம்பிகளை பொருத்தப்படவில்லை, மேலும் ஜீன் 4ஆம் தேதியன்று தற்போதைய மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் 56 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார், இச்சாலை ஓரங்களில் மண் சரிவர அணைக்காததால் கல்வெட்டுக் கோவில் அருகில் பாதசாரிகள், மற்றும் வாகனஓட்டிகளும் கூட்ட நெரிசலில் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது, மேலும் கழிவுநீர் கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது, எனவே மூடிய கழிவுநீர் கால்வாயை அமைத்து தடுப்பு கம்பிகளை மீண்டும் பொருத்தி சிமெண்ட் சாலை ஓரங்களில் சரியாக மண் அனைத்துத் தருமாறு உத்தரமேரூர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

No comments