Disqus Shortname

உத்தரமேரூரில் ஸ்ரீ துர்கையம்மன் ஆலய ஆடிப்பூர பால் குட ஊர்வலம்


உத்தரமேரூர் ஆக, 09
உத்தரமேரூர் வடவாயிர் செல்வி ஓம் ஸ்ரீ. துர்க்கையம்மன் ஆலய 23 ஆம் ஆண்டு ஆடிப்பூர  உற்சவம்  வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக  நடந்தது. நாதஸ்வர கலைஞர்கள் 50 பேர் நாதஸ்வரம் மேளம் வாசிக்க தாரை தப்பட்டம் வாதியங்கள் மற்றும்  சிலம்பாட்டடத்துடன்  பால் குட ஊற்வலம்  காலை 8 மணிக்கு முத்து பிள்ளையார் கோவிலிருந்து பஜார் வீதிவழியாக புறப்பட்டு சென்று பால் திரட்டி 201 மகளிர் பால்குட ஊர்வலத்தில் கலந்துகொண்டு அவரது கரத்தாலே ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பிற்பகல் லகன் ஜீவர்ஸ் உரிமையாளர் யூ.அமரத்லால் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகினார். கோமாதா பூஜை முடிந்த பின் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ துர்கையம்மன் திருவீதி உலா  நடைபெற்றது. ஆயிர கணக்கான பக்தர்கள்  விழாவில் கலந்துகொண்டனர்.