Disqus Shortname

அ.தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் கிராமங்களில் வினியோகம்

உத்தரமேரூர் ஆக, 05
உத்தரமேரூர் ஒன்றியம் கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெங்காரம், அழிசூர், திணையாம்பூண்டி காலணி, களியாம்பூண்டி ஆகிய கிராமங்களில் திங்கட்கிழமையன்று அ.தி.மு.க அரசின் 2 ஆண்டு காலசாதனை விளக்க துண்டு பிரசுரங்கள்  வழங்கப்பட்டது. உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒ.வி.வரதன், எம்.ஜீ.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் தங்க.பஞ்சாட்சரம், பொ.சசிக்குமார் ஆகியோர்களுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினார்கள்.
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.