Disqus Shortname

உத்தரமேரூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

உத்தரமேரூர் ஆக, 25
உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட 73 பஞ்சாயித்துகளிலும் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அனைத்து தே.மு.தி.க தொண்டர்களும்  பட்டாசு வெடித்தும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் ஏழை எளிய  மக்களுக்கு அன்னதானம் அளித்தும் வெகு விமர்சையாக கொண்டாடினர். உத்தரமேரூர் பஜார் வீதியில் 61 கிலோ கேக்கு வெட்டி ஏழை எளியோருக்கு வழங்கினர். மேலும் 5000 ரூபாய் மதிப்பிலான பீரோ  தே.மு.தி.க. தொண்டர்களின் சார்பாக ஒழுகரை அரசு பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழிசூர் வி,கன்னியப்பன் தலைமை தாங்கினார், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, ஒன்றிய துணை செயலாளர் சங்கர் ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் கோகுலகண்ணன் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் இரமேஷ் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பி,சத்தார் மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் எஸ்,தேவன் மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன் கே,முருகன், இளையபெருமாள், பாலு, காளிதாஸ் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments