Disqus Shortname

உத்திரமேரூர் வலைத் தளத்தின் முதலாம் ஆண்டு

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!  நண்பர்களே, 

உத்திரமேரூரில் நடக்கும் செய்திகளை  இணைய தளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு UTR GUYS குழுமம் செய்திகளை வழங்கிவருகிறது.

இன்று நமது ‘UTR GUYS குழுமத்துக்கு’முதலாம் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால்   

 நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று மலர்ந்துள்ளது.
உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம்.


 இன்றுடன்
நமது உத்திரமேரூர் ” வலைத்தளம் தனது முதலாம் ஆண்டினை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. இவ்வேளையில் இதன் வளர்ச்சிக்கு துணைப் புரிந்த எமது சக வலைப்பதிவர்கள், UTR GUYS குழுமங்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ,மாணவர்கள் அனைவருக்கும்  மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன் நமது உத்திரமேரூர் ”வலத்தளம் தொடர்பான குறை நிறைகளையும் உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம். 

பதிவுகள் :
பதிவுகளின் எண்ணிக்கையை சக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் நாம்
அதிக   பதிவுகளையே இட்டுள்ளோம். ஊரை பற்றிய வரலாறு செய்திகளையும் திரட்டி வருகிறோம் .. மேலும் உங்களிடம் தகவல் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள் ...இந்த வலையதளம் இன்றைய தலைமுறையினருக்கு மற்றுமல்லாது அடுத்து வரும் தலைமுறையினர்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில் இருக்கும் என்று எண்ணுகிறோம் .!!! சேகரிக்கும் இன்றைய தகவல்கள் நாளைய வரலாறு மட்டுமில்லாது அடுத்த தலைமுறையினருக்கு " உத்திரமேரூர் மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், அவர்களுடைய வாழ்வாதாரம் எத்தகையது " என்ற கால வரலாற்று சுவடாக இந்த இணையம் விளங்கும் !!!

வழித்தடங்கள்:
வருகையாளர்கள் எவ்வழியூடாக வருகின்றனர் என்று பார்ப்போமானால்
கூகிள் (google),யாஹூ (yahoo)போன்ற தேடு பொறிகளூடாக 10%.
facebook வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக56%.
நேரடியாக தளத்திற்கு வருவோர் 34%.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரம் தற்போதைய கணிப்பின் படி எடுக்கப்பட்டதாகும். ஆனால், கடந்த மாதங்களின் விகிதாசாரம் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.


வருகையாளர்களின் எண்ணிக்கை
ஒரு நாளைக்கு சராசரியாக 100 க்கும் அதிகமான வருகைகளாக உயர்ந்துள்ளது.வருகையாளர் கணிப்பான் (Traffic Statistics)   

பின்னூட்டங்கள் :
பின்னூட்டங்கள் என்று பார்த்தால் நமது தளத்திற்கு பின்னூட்டம் வருவது என்னவோ மிகவும் குறைவுதான்.
1.பலரின் கருத்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கவேண்டும் என்பது ?
ஓரிரு மாதங்களில் தமிழ் ,ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் ஆகிய மூன்று மொழியிலும் நமது இணையதளம் செயல்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் !!!
 
2 . திருமண தவகல் இணைக்க தனி இணைய முகவரி விரைவில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் .
4. உத்திரமேரூர்  மக்களும் இணையத்தில் இணைந்து தகவல் பகிர்ந்து கொள்ளவேண்டும் ?
உத்திரமேரூர்  UTR GUYS குழுமத்தில் இணைந்து தகவல் பகிர்ந்துகொள்ளலாம், நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைவருக்கும் மின் அஞ்சலில் மூலம் சென்றடையும்
5.. உத்திரமேரூர்  தேவைகள் பற்றி இணைக்க   நீங்கள் UTR GUYS இணைய குழுமத்தின் மூலமாகவோ  அல்லது உங்கள் கருத்து uthiramerur.com@gmail.com என்ற இணைப்பின் மூலம் தகவல் பகிர்ந்து கொள்ளலாம் .


நன்றி :
இணையம் ஒரு வயதினை நிறைவு செய்து புதிய நாளில் காலெடுத்து வைத்திருக்கும் இந்த நாளில் அதன் தோற்றம் முதல் அதனுடன் இணைந்து பயணித்தவர்கள் , தகவல் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் உத்திரமேரூர் UTR GUYS குழுமம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளை இனிவருங் காலங்களிலும் அதன் பயணத்திற்கு அனைவரது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.

இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும், காலமும் கைக்கொடுக்கும் என்றே நங்கள் கருதுகின்றோம்.
உத்திரமேரூர் முன்னேற வழிவகுப்போம் !!!
இனி ஒரு விதிசெய்வோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

நமது ஊர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்