Disqus Shortname

உத்திரமேரூர் துணை வட்டாட்சியர் இடைநீக்கம்: ஆட்சியர் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

உத்திரமேரூர் ஆக,29 

  ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான துணை தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ததில் உரிய நடைமுறையை கலெக்டர் கடைபிடிக்காததால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுகிறது என்று  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் செல்வம். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை 2013 ஜனவரி 10ல் போலீசார் கைது செய்தனர். அவர் 2 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில், 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்ததால் செல்வத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து காஞ்சிபுரம் கலெக்டர் ஜனவரி 11ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர் த்து துணைத் தாசில்தார் செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. செல்வம் சார்பில் வக்கீல் எம்.ஞானசேகரன் ஆஜராகி, மனுதாரர் செல்வம் 48 மணி நேரத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்படவில்லை. 48 மணி நேரத்துக்கு அதிகமாக சிறையில் இருந்தால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மனுதாரர் விஷயத்தில் மாவட்ட கலெக்டர் உரிய நடைமுறைகளைக் கடைபிடிக்கவில்லை. எனவே, செல்வத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு: மனுதாரர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்ததில் கலெக்டர் தனது கவனத்தை உரிய முறையில் செலுத்தவில்லை. எனவே, செல்வத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அவர் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை அடிப்படையில் புதிதாக நடவடிக்கை எடுக்க கலெக் டருக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

No comments