Disqus Shortname

உத்தரமேரூரில் 14 மி.மீ. மழை

 உத்திரமேரூர் ஆக,15

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.
புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்தரமேரூர், கல்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தாழ்வானப்  பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே சிறு குட்டைகளாக தேங்கி கிடந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும், மழைநீர் புகாத உடையணிந்தும் பள்ளிகளுக்குச் சென்றனர்.
புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு நிலவரம் (மழை அளவு மில்லி மீட்டரில்): காஞ்சிபுரம் 28, மதுராந்தகம் 15, உத்தரமேரூர் 14, மாமல்லபுரம் 12, கல்பாக்கம் 11, செய்யூர் 10, செங்கல்பட்டு 7, கேளம்பாக்கம், 5, ஸ்ரீபெரும்புதூர் 3 என பதிவாகி இருந்தது.