Disqus Shortname

வயலக்காவூரில் தீமிதி திருவிழா

உத்தரமேரூர் ஆக,18
உத்தரமேரூர் ஒன்றியத்தில்
அம்மன் ஆலய தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
உத்தரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட செய்யாற்றில் கரையேரத்தில்
வயலக்காவூர் கிராமத்தில் 300 வருடங்கள் பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன்
ஆலயத்தில் 10- நாட்கள் ஆடி திருவிழா நடந்தது. 10-ம் நாளான நேற்று தீமிதி
திருவிழா நடந்தது.  இவ்விழாவில் காலை செய்யாற்றில் இருந்து புனித நீர்
திரட்டி வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம்
பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையில் இட்டனர் மாலை
வாணவேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா வந்த பின்னர் 300-க்கு மேற்பட்ட
பக்தர்கள் சாதி, மதம் பேதமின்றி அனைத்து சமூககத்தினரும், காலை முதல்
மஞ்சள் ஆடை அணிந்து விரதமிருந்து மாலை 6,30 மணியளவில் தீமித்தினர்
இந்நிகழ்ச்யில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்க்கான
ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
வயலக்காவூரில் ஸ்ரீ செல்லியம்மன் கலிதீர்த்த