Disqus Shortname

உத்தரமேரூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

உத்தரமேரூர் ஆக,14
உத்தரமேரூரில் கிராம விடியல் சிறு கடன் திட்ட கிளையும், உதி கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து புதன்கிழமையன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 507 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்  மருந்து, மாத்திரைகள் வழங்கினார்கள்.  இம்முகாமில் 32 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். இம்முகாமிற்கு தலைமை அலுவலகத்திலிருந்து மண்டல மேலாளர் முகமதுஅலிப்தீன், பகுதி மேலாளர் கலையரசன், ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை கிளை மேலாளர் சே.சுரேஷ்குமார் பணியாளர்கள் அனைவரும் செய்திருந்தனர்.