Disqus Shortname

உத்தரமேரூரில் காஞ்சி மாவட்ட கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம்

உத்தரமேரூர் ஆக,27
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரதம பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்தாய்வு கூட்டம் உத்தரமேரூரில் திங்கட்கிழமைன்று நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தினை தொடர்ந்து உத்தரமேரூர் மற்றும் பெருநகர் மொத்த பால் குளிர் விக்கும் நிலையத்தின் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்தி குறித்தான விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது. உத்தரமேரூர் தொகுதி  சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத்.பா.கணேசன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு தலைமை ஏற்று காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் பால் உற்பத்தி குறித்தும் இவ்வொன்றியம் தற்போது 1 லட்சம் லிட்டருக்கு மேல் நாள் ஒன்றுக்கு  பால் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் துணைத்தலைவர்.ஆர்.பி. பழனிவேல் மற்றும் இயக்குனர்களும் கலந்து கொண்டனர். பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம பால் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் குணசீலன் சங்க செயல்பாகுபாடு   மற்றும் பாதுகாப்பு பற்றி மேம்படுவது  குறித்து மாவட்ட துணை பதிவாளர் (பால் வளம்) பி.வி.இரதாகிருண்ணன் கருத்துரை வழங்கினார்.  இம்மாவட்டத்தில் மொத்தம் 321 பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயத்திற்க்கு அடுத்தபடியாக பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் காஞ்சிபரம் மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களை அதிகப்படுத்துவது பால் உற்பத்தியை அதிகரிப்பது. கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது கால்நடைகளுக்கு தெவையான தீவனங்கள் பெறுவது நுகர்வோர்களுக்கு தரமான முறையில் பால் விநியோகிப்பது. சங்க தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழக  முதல்வர் ஜெயலலிதா சீரிய முயற்சியில்  தமிழகத்தில் இரண்டாம்  வெண்மை புரட்சிக்கு தரும் திட்டங்கள் குறித்தும் எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இக்கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை ஒன்றிய மேலாளர் (திட்டம்) எஸ்.சந்திரசேகர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் ஜி.  பொம்மகிரி செய்திருந்தார்.

No comments