Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 67-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


உத்தரமேரூர் ஆக, 15

சோழா அரிமா சங்கம் சார்பில்
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் 67-வது சுதந்திர தினவிழா
கொண்டாட்டம்  வியாழக்கிழமையன்று சிறப்பாக நடந்தது. சாசன தலைவர்
சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் கோ.காளிதாஸ் தேசிய  கொடியேற்றினார். செயலாளர் தே.வீராசாமி இனிப்புகள் வழங்கினார். பொருளாளர் வழக்கறிஞர் மணி வரவேற்று நன்றி கூறினார்.

சாலவாக்கம்
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் சுதந்திர தின விழாவிற்கு சி. இராமசாமி தலைமை தாங்கினார். கே.சிட்டிபாபு மகபூப்பாஷா, மேகநாதன், பார்த்தீபன் முன்னிலை வகித்தனர். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எம்.உசேன் தேசிய கொடியேற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தெய்வசிகாமணி இனிப்புகள் வழங்கினார். வட்டார தலைவர் ஏ. துரைராஜ் நன்றி கூறினார்.

பாலர்நேசன் நடுநிலைப்பள்ளி

உத்தரமேரூர் மிஷின்ஸ்கூல்தெருவில் உள்ள பாலர்நேசன் நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளி நிர்வாகி த.புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியை பி.கிறிஸ்டினால் ஜெபமணி வரவேற்றார். கல்வி குழு தலைவர் ஆ.சுந்தர் தலைமை தாங்கினார். தொழிலாசிரியர் அ.அருளாந்தன் இனிப்புகள் வழங்கினார். லில்லிமேரிபுஷ்பராஜ் பட்டதாரி ஆசிரியர் டி.சந்திரன் சிறப்புரையாற்றினார்கள் ஆசிரியை சி.சுமதி நன்றி கூறினார்.

உத்தரமேரூர் சுற்றுலா வேன், சுமோகார், ஓட்டுநர்கள்
உத்தரமேரூர் சுற்றுலா வேன், சுமோகார், ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நல
சங்கத்தில் சங்க கௌரவ தலைவர் கா.ஜெயவிஷ்னு பேரூராட்சி தலைவர்  சுமதி குணசேகரன் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் வி.செல்வராஜ், தலைமை தாங்கினார். செயலாளர் கே.ஜெயபால் வரவேற்றார். பொருளாளர் பி.சுப்பிரமணி இனிப்புகள் வழங்கினார். காவல்துறை ஆய்வாளர் பி. இராஜேந்திரபிரசாத் தேசிய கொடியேற்றினார். 6 வது வார்டு கவுன்சிலர் ஏ.சர்தார்கான் நன்றி கூறினார்.

மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக்கில்

சுதந்திர தினவிழா


உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் வளாகத்தில் வியாழக்கிழமையன்று 67 –வது சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது. பாலிடெக்னிக் முதல்வர் கே.ராஜா தலைமை தாங்கி சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றினார். முதலாம் ஆண்டு துறைத்தலைவர் எம்.பத்மநாபன் முன்னிலை வகித்து  வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வி.இராஜேந்திரன் இனிப்புகள் வழஙகினார்.