Disqus Shortname

பெருநகரில் 17 லட்சம் நில மோசடி மூவர் கைது இருவர் தலை மறைவு

உத்தரமேரூர் ஜீலை 31,
 உத்தரமேரூர் தாலுக்கா பெருநகரில் 17 இலட்சம் நில மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். இருவர் தலை மறைவாகினர். உத்தரமேரூர் தாலுக்கா பெருநகர் கிராமத்தில் வசிப்பவர் தேவராஜன் மகன் பன்னீர்செல்வம் 43 விவசாயி. இவருக்கு சொந்தமான 89 சென்ட் 17 இலட்சம் மதிப்புள்ள நிலத்தை பெருநகர் திருநாவுக்கரசு மகன் ரியல் எஸ்டேட் செய்துவரும் வி.டி.சுப்பிரமணியன் (54)  போலி ஆவணங்கள் மூலம் பெருநகர் சேத்பட்டை சேர்ந்த லலிதா என்பவருக்கு பொது அதிகாரம் பத்திரம்  கொடுத்தார். லலிதா தனது கணவர் சண்முகம் (54) த.பெ.சிங்காரம் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இந்த கிரைய பத்திரத்திற்கு லலிதாவின் மகன் ஜெயச்சந்திரன் (28) மற்றும் ஏழுமலை (55) என்பவர்கள் உடந்தையாக இருந்தனர். இதையறிந்த பன்னீர்செல்வம் காஞ்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம்  புகார் மனு அளித்துள்ளார்.  இதன் அடிப்படையில் உத்தரமேரூர் காவல் துறை ஆய்வாளர் இராஜேந்திரபிரசாத் மற்றும் பெருநகர் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெருநகர் திருநாவுக்கரசு மகன் வி.டி.சுப்பிரமணியன் (55), பெருநகர் சேத்பட்டை சேர்ந்த சிங்காரம் மகன் சி.சண்முகம் பெருநகர் கோவிந்தராஜ் மகன் கோ.ஏழுமலை ஆகிய  மூவரை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள சண்முகம் மனைவி லலிதா மற்றும் மகன் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.