Disqus Shortname

கோவில் கட்ட பக்தர்கள் நிதிஉதவியை நாடும் பெருமாள்

உத்தரமேரூர் ஆக -21
உத்தரமேரூர் தாலுக்கா, கம்மாளம்பூண்டி கிராமத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் புதிய கட்டிடம் கட்ட பக்தர்களின் நிதி உதவியை வேண்டும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்.    தமிழகத்திலே சைவமும், வைணவமும் மக்களின் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்து வருகிறோம்வைணவத்தலங்கள் 108-ல் 14 ஸ்தலங்கள் உள்ள காஞ்சிமா  நகருக்குத் தென்பால் சதுர்வேதிமங்கலம் என்கிற உத்தரமேரூர் அமைந்துள்ளதுஇந்நகரம்  சோழர்களாலும், பல்லவர்களாலும் ஆளப்பட்டு பல நற்பணிகள் செய்துள்ளனர். குறிப்பாக குடவோலை என்கின்ற வாக்களிக்கும் முறையை உலகிற்கு  எடுத்துக்காட்டிய ஊராகும்மேலும், அஷ்டாங்க விமானம் அமைந்த ஸ்ரீஆனந்தவல்லி நாயக ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் ஆலயமும், அருணகிரிநாதரால் சிறப்பாகப் பாடப்பெற்ற ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயமும் உள்ள இந்த  பழம்பதிக்குத் தெற்கு 4 கல்தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் கம்மாளம்பூண்டி ஆகும்இவ்வூரில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவாலயமும்விஷ்ணு ஆலயமும் அமைந்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்ஆனால் அவ்விரு  ஆலயங்களும் காலப்போக்கில்  இடிந்து தரைமட்டமாகிவிட்டதுஆனால் கடந்த  நூற்றாண்டில் வைணவ ஆலயத்தில் இருந்த அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள்அருள்மிகு கமலவல்லித் தாயார், அருள்மிகு கருடாழ்வார் ஆகிய சிலைகள்   அப்போது இருந்த பெரியவர்களால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதுஅச்சிலைகள்  ஊரின் நடுவே ஓரிடத்தில் சாதாரண முறையில் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.    மேலும், சிலைகள் மிகவும் நுட்பமான, உயர்ந்த வேலைப்பாடுகள் கொண்டுள்ளனஇதற்கு ஒர் ஆலயம் அமைத்து, சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட இக்கிராம மக்கள் முயற்சி எடுத்துள்ளார்கள்அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் உள்ள ஓர் ஸ்தபதியை அழைத்து வந்து, கோயில் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து, கடந்த 05.07.2012 வியாழக்கிழமை பூமிபூஜையும் போடப்பட்டுள்ளதுஇந்த ஆலயத்தைக் கட்டி முடிக்கப் பெரும்பொருள் தேவைப்படுவதால் இக்கிராம  மக்களே முழுச்சுமையையும் ஏற்க முடியாத நிலையில் உள்ளனர்ஆகவே  ஆலயத்திருப்பணி முழுமைப் பெற ஆன்மீகப்பெரியோர்கள் அருள்கூர்ந்து   தங்களால் இயன்றப் பொருளுதவியை கீழ்கண்ட முகவரியில் நன்கொடைகள் அனுப்பலாம். .ஆர்.ஜெயராமன், வங்கி எண்.822410100002776, பேங்க் ஆப் இந்தியா, கம்மாளம்பூண்டி கிளை, உத்தரமேரூர் தாலுக்கா, காஞ்சி மாவட்டம்.

No comments