Disqus Shortname

மீனாட்சி அம்மாள் இன்ஜீனியரிங் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

உத்தரமேரூர் ஆக,09

மீனாட்சி அம்மன் இன்ஜீனியரிங் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு  நிகழ்ச்சி  வியாழக்கிழமையன்று நடந்தது.   காஞ்சிபுரம் அருகே உள்ள வடமாவந்தலில் அருள்மிகு மீனாட்சி அம்மன் இன்ஜினியரிங்கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் பி.இ.பி.டெக் மற்றும் பி.ஆர்க் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் வரவேற்புரையாற்றினார். அருள் மிகு மீனாட்சியம்மன் கல்விகுழுமங்களின் நிர்வாக டிரஸ்ட் ஏ.என்.இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வியை சரியான முறையில் கற்க வேண்டும் மேலும் மூத்த மாணவர்கள் யாராவது ராகிங்கில் ஈடுப்பட்டால், அது பற்றி துறைத்தலைவர் முதல்வர் அல்லது ராகிங் கமிட்டி உறுப்பினர்களிடம் உடனே புகார் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து கல்லுாரி டீன்.ஹிரிபிரசாத் ஆலோசகர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் ராஜப்பா ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள் இந்நிகழ்ச்சியில் கல்லுாரியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் வெற்றி பெற்ற  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு  நிர்வாக டிரஸ்டி இராதாகிருஷ்ணன்  வேலை உறுதி சான்றிதழ்களை வழங்கினார். இறுதியில் துணை முதல்வர் சுந்தர் நன்றி கூறினார்