Disqus Shortname

மாட்டு தொழுவமாக மாறி வரும் கிளை நுாலகம்

உத்தரமேரூர் ஆக, 14
 உத்தரமேரூர்  தொகுதிக்குட்பட்ட அழிசூர் கிராமத்தில்  அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2007-08  ஆம் ஆண்டு 2.70.லட்சத்தில் கட்டப்பட்டது இக்கிளைநுாலகம் இந்நுாலகத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வைக்கப்பட்டு அழிசூர் காலணி, திணையாம்பூண்டி, சிலம்பாக்கம், ஒழுகரை, கம்மாளம்பூண்டி, ஆண்டித்தாங்கல் போன்ற 12 க்கு மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர்கள் இந்நுாலகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நுாலகத்தை மாவட்ட தலைமை நுாலக அலுவலர்கள் 2011 ஜனவரியில் பார்வையிட்டு இந்நுாலகத்திற்கு 16.03.2011-ல் மகாத்மா காந்தி சமூதாய நல்லினக்க விருதை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்நுாலகம் பயன்பாட்டிற்க்கில்லாமல் மாடுகள் கட்டி மாட்டு தொழுவமாக மாறிவிட்டது. இந்நுாலகத்திற்கு உள்ளே இருக்கும் பல இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் செல் அறித்து வீணாகிவருகின்றன. கட்டிடங்களும் பழுதடைந்துள்ளது. கட்டிடம் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறினர்.  இதனால் பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரமேரூர் நுாலகத்திற்கு வந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளதால் மாணவ மாணவியர்கள் பெரிதும் சிரமத்திற்க்குள்ளாகின்றனர். பூட்டிய நிலையில்  பழுதாகியுள்ள இந்நுாலகத்தை விரைவில் திறக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுவிடுத்துள்ளர்.