Disqus Shortname

அ.பி.சத்திரம் வடக்கு மாரியம்மன் ஆலய திருவிழா இன்று துவக்கம்


உத்தரமேரூர் ஜீலை,12
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அருணாசலப்பிள்ளை சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வடக்கு மாரியம்மன் ஆலய திருவிழாவில் 12-ம் தேதி  வெள்ளிக்கிழமையன்று  அம்மனுக்கு காப்புகட்டுதலும், 13ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணி அளவில் அம்மன் ஊர்வலமும் நடக்கிறது. 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 2 மணி அளவில் அம்மன் திருவீதி உலாவில் பக்தர்கள் பொது மக்களும் கூழ் ஊற்றி அம்மனை வழிபடுவார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை அ.பி.சத்திரம் கோ.பெருமாள் உட்பட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.