Disqus Shortname

உத்தரமேரூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர்,ஜீலை03
தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரமேரூர் தொழிலாளர் முன்னேற்றசங்கத்தினர் புதன்கிழமையன்று உத்தரமேரூர் பணிமனை அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. என்.எல்.சி. பங்குகளைதனியாருக்கு விற்க கூடாது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை உடனேவழங்கவும் 2010 ஊதிய ஒப்பபந்தத்தை  உடனே நிறைவேற்றவும், புதியதொழிலாளர்கள் ஓய்வூதிய பலன் பெற கூறியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்  நடத்தினர். இதில் தொழிலாளர் சங்க முன்னேற்ற மத்திய சங்க துணை செயலாளர்
து.சுந்தர் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் பணிமனை ஓட்டுனர் செயலாளர் சி.சினிவாசன் பொதுக்குழு உறுப்பினர் ஜி.திருநாவுக்கரசு ஏ.தன்ராஜ் முன்னிலை வகித்தனர். மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் செல்லமுத்து  வரவேற்றார் பத்மநாபன் நன்றி கூறினார்.

No comments