Disqus Shortname

இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

உத்திரமேரூர் ஜூலை 11:
 தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்திரமேரூரையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வரையிலான நிலவரப்படி சின்னக்கல்லாற்றில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. தேவாலா, வால்பாறையில் 40 மி.மீ. மழையும், நடுவட்டம், செங்கோட்டையில் 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பெரியாறு, தளி, மேல் ஆலத்தூர், பென்னாகரம், ஆரணி (20 மி.மீ.), உத்திரமேரூர், கூடலூர், செய்யாறு, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, குளச்சல், தேன்கனிகோட்டை (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.