Disqus Shortname

சாலவாக்கம் இந்தியன் வங்கியில் காசாளரின் கண்ணாடி அறை உடைப்பு


உத்தரமேரூர் ஜீன்,29
      காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கிகாசாளரின் கண்ணாடி அறை நுாறு நாள் வேலை திட்ட சம்பளம் வாங்க வந்த பெண்கள் வெள்ளிக்கிழமையன்று கண்ணாடி அறையை உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த பி.டி.ஓஅலுவலர், கிராம நிர்வாகிகள் மற்றும் சாலவாக்கம் காவல் துறை அதிகாரிகள் விரைந்து வங்கி அதிகாரிகளை மீட்டனர். இந்தியன்வங்கி கட்டுப்பாட்டில் 9 பஞ்சாயத்துக்கள் அடங்கிய 25 கிராமங்களுக்கு மேல் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். சாலவாக்கம் வங்கியில் ஒரு வாரத்திற்கு செவ்வாய், வெள்ளி இரண்டு நாள் மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்த வங்கியில் 100 நாள் பணம் வழங்கும் நாள் அன்று மட்டும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் குவிகின்றனர். இதனால் மக்களின் அன்றாட வேலை மிகவும் பாதிப்பு அடைகின்றனர். சாலவாக்கம் கிராமத்தில் காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மின்சார அலுவலகம் ஆகிய அடங்கிய மைய பகுதியாக சாலவாக்கம் திகழ்கிறது. ,இந்த பகுதியில் ஒரு வங்கி மட்டுமே உள்ளது. இங்கு அவரச பண உதவிக்கு செல்ல சாலவாக்கம் கிராமத்தில் இருந்து 20 கி.மீ  துாரத்தில் உள்ள  செங்கல்பட்டு அல்லது 25 கி.மீட்டரில் உள்ள  உத்தரமேரூர் செல்ல வேண்டிய அவல நிலை உருவாகிறது. இக்கிராம மக்களுக்கு  குறைந்த பட்சம்   இரண்டு வங்கியாவது இருக்க வேண்டும் மற்றும் 24 மணிநேரம் வழங்கும்  ஏ.டிஎம் இயந்திரமும் வேண்டும் என இப்பகுதிகளின் கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments