Disqus Shortname

உத்தரமேரூரில் அரசு ஆண்கள் பெண்கள் நலவிடுதி மாணவர்கள் செயற்குழு கூட்டம்


உத்தரமேரூர் ஜீலை,11 
 
உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று 6 அரசு ஆண்கள், பெண்கள் நல விடுதிகள் மாணவர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. உத்தரமேரூர் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி விடுதிகள், வாலாஜாபாத் ஆண்கள் பெண்கள் பள்ளி விடுதிகள், மானாம்பதி, சாலவாக்கம் ஆண்கள் விடுதிகள் ஆகமொத்தம் 6 அரசு நலவிடுதிகள் மாணவர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது. உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி ஆய்வு  நடத்தி கோப்புகளில் கையெழுத்திட்டார். மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் என்.நாகநாதன் கூறியது. மாணவர்கள் செயற்குழு 3 ஆண்டுகள் செயல்படும் இது கடைசி ஆண்டு 2014 ம் ஆண்டு புதிய உறுப்பினர்கள்  தேர்வு நடக்கும். 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியும், மாணவிகளுக்கு இவலச தையல் மிஷின் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில்40 பேர் சேர்ந்துள்ளனர். கனரக வாகன ஓட்டுநர்கள் பயிற்சி குறைவாக உள்ளதால் 100 ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்க பட உள்ளது. இம்மாவட்டத்தில் 27 பள்ளி மாணவ, மாணவியர் நலவிடுதி செயல்பட்டு வருகிறது.  காரப்பேட்டையில் 62 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்து மாவட்ட பிற்படுத்த நல அலுவலர் என்.நாகராஜன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை,கே.பிகாஷ்பாபு, புலியூர் தலைவர் பழனி அ.பி.சத்திரம் ஜி.பெருமாள்,மானாம்பதி கண்டிகை லுாசியாஜேம்ஸ்,பொ.சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.