Disqus Shortname

உத்தரமேரூரில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

உத்தரமேரூர், ஜூலை 15:
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் திங்கள்கிழமை பெருந்தலைவர் காமராஜரின் 111-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சி.இராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநிலத் தலைவர் எம்.உசேன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். உத்தரமேரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. சு.சம்பத் கொடி ஏற்றினார். இ.சீனிவாசன் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.