Disqus Shortname

உத்தரமேரூரில் இன்று தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர் ஜீலை,18
உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் பகல் 11மணி அளவில் வியாழக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் அ.தி.மு.க அரசை கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழகசெயலாளர் ஆர்.இரமேஷ்பிரபாகரன் கண்டன உரையாற்றுகிறார். மாவட்ட துணைசெயலாளர் வி.பி.ஜான், உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் வி.கன்னியப்பன் முன்னிலை வகிக்கிறார்கள் பேரூர் கழக செயலாளர் ஜி.கே.வெங்கடேசன் வரவேற்கிறார். மாநில துணை தலைவர் ஏ.சர்தார்பாய் உட்பட பலர் உரையாற்றுகிறார்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.பி அருண்குமார் நன்றி கூறுகிறார்.