Disqus Shortname

572 பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்


உத்தரமேரூர் ஜீலை,20

உத்தரமேரூர் தாலுக்கா அகரம்துாளி கிராமத்தில் சனிக்கிழமையன்று காஞ்சி
மாவட்டம் தமிழ் நாடு அரசு புதுவாழ்வு  திட்டம் மற்றும் காஞ்சி மீனாட்சி
மருத்துவக்கல்லுாரி  மருத்துவமனையும் அத்தியூர் கிராம மருத்துவ மையமும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.  ஊராட்சி மன்றத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். டாக்டர். சி.சுப்பிரமணியன்  அனைவ்ரையும் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் நேரு முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் முதல்வர்
கே.ராஜா சிகிச்சை முகாமை துவக்கி வைத்து பேசினார். காஞ்சி மீனாட்சி
மருத்துவக்கல்லுாரி மருத்துவர்கள் கார்த்திக், முத்துபாபு, அபிநந்தா,
உட்பட 9 டாக்டர்கள்   572 பொது மக்களுக்கு பரிசோதனை  செய்து மருந்து
மாத்திரைகள் வழங்கினார்கள். சுருள் படம் சர்க்கரைநோய் ரத்த கொதிப்பு, பல்
பரிசோதனை செய்தனர் , கண் அறுவை சிகிச்சை செய்ய 2 நபர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி
நன்றி கூறினார்.