Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்

உத்திரமேரூர் ஜூலை 29:
உத்திரமேரூர் ஒன்றியத்தில், நாளை, "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடபாளையம், நெய்யாடிவாக்கம், கடல்மங்கலம் ஆகிய ஊராட்சிகளில், நாளை, "அம்மா' திட்டத்தின் கீழ், சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, குடும்ப அட்டை, மனைபட்டா, விதவை நிவாரணத் தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து, பயன் பெறலாம் என,
வட்டாட்சியர் சாவித்திரி தெரிவித்து உள்ளார்.
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.