Disqus Shortname

சாலவாக்கத்தில் 222 மடி கணினி வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீலை,2
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா 222 மடி கணினி வழங்கும் விழா நடந்தது. பள்ளித்தலைமை ஆசிரியர் கே.வி.ராம்மோகன் வரவேற்றார். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வனிதாமுருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத்தலைவர் தனக்கோட்டி கன்னியப்பன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தமிழக முதல்வர் வழங்கும் விலையில்லா மடிகணினியை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் ஒன்றிய கழக
செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை ஒன்றியகுழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தண்டரை தணிகைவேல், திருவானைக்கோவில் ஜி.அம்பிகா கோவிந்தராஜ், , பி,வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments