Disqus Shortname

உத்தரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ கணிப்பு முகாம்


உத்தரமேரூர் ஜீலை,26
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி நடுநிலைப்பள்ளியில்
வெள்ளிக்கிழமையன்று காஞ்சி மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய, கல்வி திட்டத்தின் கீழ்
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ கணிப்பு முகாம் மாவட்ட
ஆட்சியர் லி.சித்ரசேனன் உத்தரவின் படி நடந்தது. உத்தரமேரூர் வட்டார வளமைய
மேற்பார்வையாளர் ஏ.இராஜேந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார். இம்முகாமில் மாற்றுத்திறன் கொண்ட கண்பார்வை குறை,
காதுகேளாதோர், மன நலம் குன்றியோர், கை, கால், பாதிப்படைந்தோர் என 223
மாணவ, மாணவியருக்கு பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள்
அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவி தொகை
போன்ற உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட மறு வாழ்வு அலுவலர் விஜயக்குமார்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சஞ்சீவ்குமார் ஆசிரியர்பயிற்றுநர்கள்,
சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். 7 மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று
சிகிச்சை அளித்தனர்