Disqus Shortname

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலகாளியம்மன் பீடத்தில் தீமிதி திருவிழா

உத்தரமேரூர் ஜீலை,21
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் ஸ்ரீ
திரிசூலக்காளியம்மன் பீடத்தில் 29-ம் ஆண்டு தீமிதி திருவிழா 21-ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கிறது காலை 6 மணிக்கு அபிஷேகம் மற்றும்
ஆராதனையுடன் ஆரம்பிக்கபட்டு காலை,7.30 மணிக்கு உலக நன்மைக்காக யாக
வேள்வியும்  8.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், பகல் 1 மணிக்கு
கூழ்வார்த்தலும், அன்னதானமும், முடிந்தபின் ஆதரவற்ற குழந்தைகள், மற்றும்
பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகளும், முதியோர்களுக்கு வேட்டி, சேலையும்,
வழஙகுகிறார்கள் மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. விழா விற்க்கான
ஏற்பாடுகளை ஆலய நிரிவாகி கோ.காளிதாஸ் செய்து வருகிறார்.