Disqus Shortname

புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டுமிடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பார்வை

உத்தரமேரூர் ஜீலை,22


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆனணக்கினங்க உத்தரமேரூர் தாலுக்கா, திருப்புலிவனத்தில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்க உத்தரவிட்டார். அதன்படி திங்கட்கிழமையன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன், உத்தரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கல்லூரி கட்டுமிடத்தை பார்வையிட்டனர்.   உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2013-14 ஆம் ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயில கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை பார்வையிட்டனர்.  கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர்.கிள்ளிவளவன் கூறியது- இக்கல்லூரியில் 240 மாணவ மாணவியர் சேர்க்கையில் மாணவிகள் 80, மாணவர்கள் 78 ஆக மொத்தம் 158 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.  மீதமுள்ள இடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பங்களை ஆண்கள் பள்ளி வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், திருப்புலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர் கார்வண்ணன், திருவந்தவார் முருகன், தண்டரை தணிகைவேல், களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம், எம்.கே.பி.வேலு, பொ.சசிகுமார், புலியூர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.