Disqus Shortname

உத்தரமேரூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

உத்தரமேரூர் ஜீன்,29

உத்தரமேரூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமையன்று பி.டி.என்.திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் வழக்கறிஞர் கே.சண்முகசுந்தரம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். 2013-2014 ஆம் ஆண்டு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தலைவர் மு.சுப்பிரமணியன், செயலாளர் சு.சம்பத், பொருளாளர் டி.சுசில்குமார், மற்றும் பல்வேறு நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநர் எ.பி.கண்ணா பதவி பிரமானம் செய்து வைத்தும் மேலும் இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் 2 நபர்களுக்கு 3 சக்கர சைக்கிளும், பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லத்திற்க்கு 100கிலோ அரிசி மற்றும் 10,12 தேர்வுகளில் முதல் இரண்டாமிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளும் 5 மூதாட்டிகளுக்கு இலவச அரிசிகளும், ஆளுநர் எ.பி.கண்ணா வழங்கி வாழ்த்தி பேசினார். உதவி ஆளுநர் எஸ்.சுந்தர்ராஜ், மண்டல செயலாளர் மைக்கேல் ரொசாரியா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் இவ்விழாவில் முன்னாள் சங்க செயலாளர் ஆர்.ராமகிருஷ்ணன், பொருளாளர் ஹீரா ஜிவல்லர் ரமேஷ் விமலா ஜிவல்லரி சா.நந்தகிஷோர் உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் சங்க புதிய செயலாளர் சு.சம்பத் நன்றி கூறினார்.

No comments