Disqus Shortname

பிரிவு உபச்சார விழா

உத்தரமேரூர் டிச, 31
உத்தரமேரூர் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையத்தில் கடந்த ஐந்தரை வருடங்களாக வட்டார வளமைய மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த ஏ.இராஜேந்திரன் எலப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு செவ்வாய்கிழமையன்று பிரிவு உபச்சார விழா நடந்தது. தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உத்தரமேரூர் வட்டார
கிளையின் தலைவர் ஏ.ஆறுமுகம், தலைமை தாங்கினார்.செயலாளர் வி.தணிகைவேல் வரவேற்றார்.  தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்ட இணைச்செயலாளர் நி.அன்னலரசு, உத்தரமேரூர் சோழா அரிமா சங்க துணைச்செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன் ஒழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்பா.பர்ணபாஸ்பால்ரவிச்சந்திரன் ஆலஞ்சேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி தலைமை ஆசிரியை ஜி.டி.ஞானம்மா புகைப்படகலைஞர் ஹரி உட்பட பலர் பாராட்டி பேசி
நினைவு பரிசு வழங்கினார். ஏ.இராஜேந்திரன் ஏற்புரையாற்றினார்.

No comments