Disqus Shortname

ம.தி.மு.க கொடியேற்றி விழா பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் டிச,09
உத்தரமேரூர்  மற்றும் மதுராந்தகம் ஒன்றிய கழகம் சார்பில் மறுமலர்ச்சி தி.மு.க கொடியேற்றுவிழாவும், பொதுக்கூட்டமும் ஞாயிற்றுக்கிழமையன்று நெல்வாய்கூட்ரோட்டில் நடைபெற்றது. மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் க.ராஜா தலைமை தாங்கினார். உத்தரமேரூர்  மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கிழக்கு  ஒன்றிய கழக செயலாளர் எ.தயாளன் வரவேற்றார். ம.தி.மு.க மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா மாவட்ட கழக செயலாளர் தளபதி க.சோமு மாவட்ட கழக நிர்வாகிகள் உதயம் கோ.ராதா, கே.பி.ராமலிங்கம் ஜீ.கருணாகரன், கலைவாணி மாரிமுத்து மாவட்ட  பிரதிநிதிகள் உத்தரமேரூர் கே.சங்கரன், குரோம்பேட்டை நாசர், வல்லம் கோபி. உட்பட கழக நிர்வாகிகளுடன் மதுராந்தகம், வடபாதி கிராமத்தில் ஆரம்பித்து உத்தரமேரூர் தாலுக்கா அ.பி.சத்திரம் ஆக 13 கிராமத்தில் மாநில துணைபொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா ம.தி.மு.க கொடியேற்றினார். மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொருளாளர் பி.துரை நன்றி கூறினார்.

No comments