Disqus Shortname

ஊழலற்ற ஆட்சி புரிய தகுதி படைத்தவர் வை.கோ.

உத்தரமேரூர் டிச, 09
ஊழலற்ற ஆட்சி புரிய தகுதி படைத்தவர் வை.கோ. தான் என்று 90 வயது  குல்தீப்நாயரும், கல்லுாரி மாணவர்களும் தெரிவித்தனர். மல்லை சத்யா கூறினார். மேலும் சத்யா பேசியது. காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர்  வைரமேகன் தடாகம் ஏரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. இதேபோல் 15 மாவட்டங்களில் கால்நடைகள் ஆடு, மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இறந்த ஆடுகளுக்கு 10 ஆயிரமும், மாடுகளுக்கு 25 ஆயிரமும் வீதம் நஷ்ட ஈடுதர வேண்டும் இறந்த மாடுகளை ஆழமாக குழி தோண்டி அடக்கம் செய்ய 5 ஆயிரம் தரவேண்டும் என ம.தி.மு.,க பொதுச்செயலாளர் வை.கோ.அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய தொல்லியல் துறை பிரச்சனை, படாளம் கரும்பு சர்க்கரை  ஆலையை தனியாரிடம் தாரை வார்த்து தர போவதை கண்டித்து வை.கே..கண்டனம் தெரிவித்தார். மதுராந்தகம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செயல்படவும் விவசாயிகள் பலன் அடைய வேண்டும் என்றும் நெசவாளர்கள் நலிவடைந்து போவதை கண்டும் குரல் கொடுத்தவர் வை.கோ. மட்டும் தான் மேலும் ஊழலற்ற ஆட்சி புரியும் தகுதி  படைத்த ஒரே தலைவர் வை.கோ.தான் என்று 90 வயது குல்தீப் நாயரும் 2012 ல் டி.வி.எஸ் மகாலட்சுமி பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் ஒன்று கூடி விஞ்ஞான அரசியல் பற்றி கேட்டபோது 5 மாநில தலைவர்கள் ஒன்று கூடி மாடக்குளம், மதுரை கன்னியாகுமரி மாணவர்களும் ஊழலற்ற ஆட்சி அமைக்கும் தகுதி வை.கோ.விற்கு தான் உள்ளது என்று கூறினார்கள். நடந்து முடிந்த 4 மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்து பி.ஜே.பி.ஆட்சியை கைப்பற்றியது அரசாங்கம் மாறியுள்ளதை போல் மின்வெட்டு, கூடங்குளம், முல்லை பெரியாரு பிரச்சனையாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை வீழ்ச்சி அடைய வைத்துள்ளனர். பொது மக்கள் ஏற்காடு தேர்தலில் 5 ஆயிரம் வாக்காளர்கள் எந்த கட்சியினருக்கும் வாக்கு அளிக்காமல்  தேர்தலை புறக்கணித்துள்ளனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ.பொதுமக்களின் நியாயமான  பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட ஆர்வமுள்ள அரசியல் கட்சி தலைவர் வை.கோ. மட்டுமே ஆகவே ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ம.தி.,மு.க சார்பில் காஞ்சி மாவட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் படுத்தி  வை.கோ.அறிவித்த உடன் ம.தி.மு.க  நிர்வாகிகள் தொண்டர்கள் அயராது பாடுபட்டு பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். ம.தி.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா. 

No comments