Disqus Shortname

பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

உத்தரமேரூர் டிச-7
     உத்தரமேரூர் தாலுக்கா, தட்டாம்பூண்டி, நாஞ்சிபுரம் கிராமங்களில் சனிக்கிழமையன்று கரூர் ரிஷி தொண்டுநிறுவனம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு வேலூர் மண்டலம் சார்பில் கிராமங்களில் குடிநீர் நிர்வாகம், குடிநீர் தரபரிசோதனை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி தட்டாம்பூண்டி கிராமசபை கூட்டத்தில் நடந்தது.  இப்பயிற்சிக்கு நாஞ்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ந.அனுசுயாநந்தன் தலைமை தாங்கினார்.  ரிஷி தொண்டுநிறுவனத்தின் பயிற்றுனர் எம்.இந்திரஜோதி, கே.பச்சையம்மாள் ஆகியோர் குடிநீரை எப்படி பயன்படுத்துவது, குடிநீரின் முக்கியத்துவம், குடிநீரிர் மாசுபடுவதை எப்படி தடுப்பது குறித்தும், நீர்சேகரித்தல் கையாலும் முறை, அசுத்தமான நீரினால் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்கள்.  பஞ்சாயத்து செயலாளர் வி.குருமூர்த்தி நன்றி கூறினார்.  இதேபோல புலியூர், காரியமங்கலம் கிராமங்களிலும் ரிஷி தொண்டுநிறுவன பயிற்றுனர்கள் ஆயிஷா, பாக்கியலட்சுமி ஆகியோர் குடிநீர் உபயோகிக்கும் முறைப்பற்றி விளக்கி பேசினார்கள்.  இப்பயிற்சியில் புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments