Disqus Shortname

ம.தி.மு.க ஆர்ப்பாட்டம்.

உத்தரமேரூர் டிச,23
காஞ்சி மாவட்ட உத்தரமேரூரில் குடவோலை துறை மூலம் தேர்தல் நடத்திய உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலை தொல் பொருள் துறையினர் கையகப்படுத்தியதை கைவிட கோரி உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க மாநில துணைப்பொதுச்செயலாளர் மல்லை.சி.ஏ.சத்யா மேலும் பேசியது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ.உத்தரவின் பேரில் மக்கள் வாழ்வுரிமை மீட்பு குழு அமைப்பு ஏற்படுத்தி பொது மக்களின் நியாயமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க உத்தரமேரூக்கு 23 ம் தேதி சென்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார். வைகுண்ட பெருமாள் கோவிலை தொல் பொருள் துறையினர் கையகப்படுத்தினால் உத்தரமேரூரில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாது பஸ் நிலையம் கிடையாது, குடும்பம் நடத்த முடியாது. புதிய வீடுகள் கட்டவும் மின் இணைப்பு பெறவும் முடியாது, மீறி  கட்டிடம் கட்டினால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை     ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதை
கண்டித்து உத்தரமேரூர் ஒன்றிய ம.தி.ம.க வின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெற்று வருகிறது புதுக்கோட்டை, புதுச்சேரியை போல நிர் மானிக்கப்பட்ட உத்தரமேரூர் தாமரை இதழாக திகழ்கிறது.மக்கள் வாழ பூங்காக்கள், கழிவு நீர் அகற்றம்  போன்ற வற்றால் நோயின்றி வாழலாம். 1250 ம் வருடம் 8ம் நுாற்றாண்டில் பராந்தசோழன் நிர்மானத்தால் குடியாட்சி மக்களை குடவோலை முறை மூலம் வைகுண்ட பெருமாள் கோவில் கட்டிடம் கட்டப்படாமல் இக்கிராம மக்கள் ஒன்று கூடி  கருங்கல்லாலும், செங்கல், ஓடுகலாலும், மரங்கள் போன்றவற்றால் கட்டப்பட்டவை இவைகளை கல்வெட்டில் எழுதி செதுக்கி வைத்துள்ளனர். தேர்தல்
முறையில் பானை குடத்தில் பெயர்கள் எழுதி வைத்து குழந்தையை விட்டு சீட்டு எடுக்க சொல்லி தலைவர், உறுப்பினர் தேர்வு செய்யப்பட்ட உலக பிரசித்தி பெற்ற  உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலை  தொல் பொருள் துறையினர் கையகப்படுத்த அனுமதிக்கலாமா? மேலும் இக்கோவில் பெருமைகளை தெரிந்து முன்னாள் பாரதபிரதமர். மற்றும் சேஷன் வந்து பார்த்து சென்றுள்ளனர் 1958 க்கு பின் மத்திய தொல்லியல் துறை உருவாக்கி சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாத்து வந்தது உத்தரமேரூர் பொது மக்கள் தான். 108 ஊர்களில் உத்தரமேரூர் காஞ்சி சதுரங்கப்பட்டிணம், தாம்பரம் பெருங்களத்துார் மக்களுக்கு விரோத சட்டத்தை கொண்டு வந்து மத்திய மாநில அரசுகள் அங்கீகாரம் பெறாமல் 300 மீட்டரில் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இதை ம.தி.மு.க மாநிலபொதுச்செயலாளர் வை.கோ. மாமல்லபுரம் தலசயண பெருமாள் கோவிலை
கையகப்படுத்தியதை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தலசயண பெருமாள் கோவில் தலைதப்பியது.  செங்கல்பட்டில் நடைபெற்ற  தி.மு.க
பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சில் காங்கிரஸ் கட்சி உறவை 9
மாதங்களுக்கு முன்பே துண்டித்து விட்டோம் என்று பேசினார். கடந்த 9
ஆண்டுகளாக அக்கட்சியோடு கூட்டு வைத்திருந்து  எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்து காங்கிரஸ்க்கு ஆதரவு அளித்தீர்களே இது ஞாயமா? சதுர் வேதி மங்கலம் என்று அழைக்கப்படும் பெருங்கோழி கிராமத்தில்  வாழ்ந்த மக்கள்  தான் தகுதியானவர்களாக தேர்வு செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.. ஆகவே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஊழலற்ற லஞ்சமற்ற மற்றும் கொலை
கொள்ளைகள் நடக்காமல் நாட்டை காக்க ம.தி.மு.க  பொதுச்செயலாளர்
வைகோ. வை ஆதரித்தால் தான் நாடும் மக்களும் நலமுடன் வாழ முடியும் என்று கூறி மத்திய அரசின் தொல் பொருள் துறையினர் சட்ட   நகல்களை  எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் மத்திய அரசே தொல்லியல் துறையே அனுமதி கொடு மின் இணைப்பிற்கு 2010 ல் தொல்லியல் துறை சட்டத்தை ரத்து செய் அஞ்ச மாட்டோம் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் எங்கள் பூமி புண்ணிய பூமி கொள்ளை அடிக்க அனுமதிக்க மாட்டோம் செல்சேல்  டெல்லிசெல் தொல்லியல் துறையே வெளியேறு செல்லோ செல்லோ டெல்லிசெல்லோ வாபஸ் வாங்கு மக்கள் விரோத சட்டத்தை வாபஸ்
வாங்கு எங்கள் மண்ணில் வீடு கட்ட தடை விதிக்காதே என்று கோஷமிட்டனர். முடிவில் நகர  துணைச்செயலாளர் கி.இமானுவேல் நன்றி கூறினார்.

No comments