Disqus Shortname

மாட்டுவண்டி தொழிலாளர்கள் தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்.

உத்தரமேரூர் டிச,17
உத்தரமேரூர் வட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க செய்யாற்றில் அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கமும் இணைந்து திங்கட்கிழமை காலை அம்பேத்கர் சிலையில் இருந்து துவங்கி பஜார்வீதி வழியாக தாலுக்கா அலுவலகம் வழியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கீழ் கண்ட கோரிக்கைகள் வைத்து கோஷமிட்டனர்- உள்ளூர் தேவைகளுக்கு மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி கொக்கவும். பெருநகர், அனுமந்தண்டலம், வெங்கச்சேரி, வெங்காரம், நெய்யாடுவாக்கம், திருமுக்கூடல் பகுதியில் உள்ள செய்யாற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்கிடவும், அனைத்து மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிடவும், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவோ அல்லது பொதுப்பணித்துறை அலவலர்கள் மூலமாகவோ கட்டணம் பெற்றுக்கொண்டு மணல் வழங்கிடவும். போன்ற கோரிக்கைகள் முன்வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சொ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், சடையாண்டி சுப்பிரமணி மோகன் முன்னிலை வகித்தனர்.  மாநில செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கெம்பு மகேஸ்பாபு, ஆறுமுகம், கணேசன் சோழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

No comments