Disqus Shortname

உத்தரமேரூரில் விவேகானந்தர் 150-வது ஜெயந்தி ரதயாத்திரை

உத்தரமேரூர் டிச,12
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லியங்கரணை இராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வளாகத்தில் இருந்து சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி ரத யாத்திரை விழா புதன் கிழமையன்று துவங்கியது. பள்ளி செயலாளர் அமுர்தானந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். பள்ளி மாணவியர்கள்  பரதநாட்டியங்கள்  கலை நிகழ்ச்சிகளுடன் ரதயாத்திரையில் நின்ற நிலையில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். பள்ளி 175 மாணவ மாணவியர் விவேகானந்தர் அணிந்துள்ள ஆடையை போல தலைப்பாகையுடன்  ஆடைகள் அணிந்து ஊர்வலமாக சென்றனர். இவ் ஊர்வலத்திற்க்கு கடல்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தே.வீராசாமி அரிமா சங்க மாவட்ட கவர்னர் எம்.எஸ்.முருகப்பா, மாவட்ட குழு தலைவர் டி.கே.கோபாலகிருஷ்ணன், சாசன தலைவர் டாக்டர். சி.சுப்பிரமணியன்,  உத்தரமேரூர் அரிமா சங்க தலைவர் கோ.காளிதாஸ், பொருளாளர் மணி, ஆகியோர் முன்னிலையில் மல்லியங்கரணை இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இருந்து புறப்பட்ட ரதயாத்திரை  பட்டாங்குளம், பருத்திகொல்லை, அ.பி.சத்திரம் வழியாக உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி‘நாயக சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் எதிரில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா கூட்டம் நடந்தது.  இராமகிருஷ்ணா மிஷன் பள்ளித்தலைமை ஆசிரியர் ஆ.ஏழுமலை வரவேற்றார். காஞ்சிபுரம், இராமகிருஷ்ணா மடம் தலைவர் சுவாமி ஆத்மகானந்தமஹராஜ் தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்டத்தலைவர் டாக்டர் கே.பரமசிவம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் டாக்ட.ர். கே.ஆனந்த் கே.வி.சேகர், கோபி, கோ.சந்தானகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இராமகிருஷ்ணா மிஷன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.இளவரசி நன்றி கூறினார்.

No comments