Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 61.75 லட்சத்தில் புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை விழா

உத்தரமேரூர் டிச,16
உத்தரமேரூர் கிழக்கு மேற்கு ஒன்றியங்களில் சனிக்கிழமையன்று ரூ.61.75 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை விழா நடைபெற்றது. ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் கே.பிகாஷ்பாபு வரவேற்றார். சாலவாக்கத்தில் புதிய நியாயவிலை கடை ரூ.6லட்சம், அத்தியூர் அங்கன்வாடிகட்டிடம் ரூ.5 லட்சம், அத்தியூர் மேல்துாளி மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் ரூ.4,75 லட்சம், திருமுக்கூடல் அங்கன் வாடி கட்டிடம் ரூ.5 லட்சம், ஆலஞ்சேரி மகளிர் சுயஉதவி குழு கட்டிடம் ரூ.5 லட்சம், எடமிச்சி குழந்தைகள் நலமைய கட்டிடம் ரூ.5, லட்சம், படூர் கூடுதல் மருத்துவ கட்டிடம் ரூ 15, லட்சம், திருப்புலிவனம் நியாயவிலை கடை கட்டிடம் ரூ.6, லட்சம், திணையாம்பூண்டி நியாயவிலை கட்டிடம் ரூ.5 லட்சம், ஓட்டந்தாங்கல் அங்கன்வாடி கட்டிடம் ரூ.5 லட்சம், ஆக மொத்தம் 61 லட்சத்து 75 ஆயிரத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத். பா.கணேசன் அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்து வைத்தார். இவ்விழாவில் காஞ்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி,ஒன்றியக்குழு உறுப்பினர் டி.எம்.சடையாண்டி, தங்க.பஞ்சாட்சரம், திருவந்தவார் முருகன், மாவட்டகுழு உறுப்பினர் சுமதிகுணசீலன் கே.ஆர்.தருமன், ஓ.வி.வரதன், வரலட்சுமிகருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.குணசேகரன், ஆர்.ராஜ்குமார் கோ.தனபால் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments