Disqus Shortname

கிராம நிர்வாக அலுவலர்கள் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

உத்தரமேரூர் டிச,15
காஞ்சி மாவட்டம் உத்தரமேரூரில் தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நலச்சங்கம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது மாவட்டதலைவர் இ.இராஜேந்திரன். தலைமை தாங்கினார். காஞ்சி கோட்ட செயலாளர் துரை, ஹரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாநில தலைவர் இரவிரங்கராஜன் முன்னிலை வகித்தார். அவ்வமையம் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2014 ஆம் வருடம் பொங்கல் திருநாளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை, திட்டத்திற்கு இப்போதே கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க கணினியில் பதிவு செய்திட கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பாக மாநில மையம் எடுக்கும் நடவடிக்கை மாவட்ட பொதுக்குழு கட்டுப்படும், வருவாய் துறையின் மாபெரும் மக்கள் திட்டமான “அம்மா” திட்டத்திற்கு ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.5 ஆயிரம் மட்டும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கிராமத்தில் வெற்றிகரமாக சென்றடைய ஏற்பாடு செய்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் தான். எனவே இத்திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கிராம நிர்வாக  அலுவலர்களுக்கு வழங்கும் ரூ.5 ஆயிரம் நமது மாவட்டத்தில் உடன் கிராம நிர்வாக அலுலர்களுக்கு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவரை இப்பொதுக்குழு ஏகமனதாக கேட்டுக்கொள்கின்றது. உட்பட 7 கோரிக்கைகள் இக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் கே.ஜெகன்னாதன், மாவட்ட துணைச்செயலாளர் க.அருள் நாதன்,மாவட்ட துணைத்தலைவ்ர க.அருளரசு, உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட செயலாளர் சு.சீனிவாசன் நன்றி கூறினார்.

No comments