Disqus Shortname

வாலாஜாபாத்தில் இலவச பொதுமருத்துவ முகாம்

உத்தரமேரூர் டிச-7
 வாலாஜாபாத் அரிமா சங்கமும், பொத்தேரி எஸ்.ஆர்.எம்.பொதுமருத்தவமனையும் இணைந்து சனிக்கிழமையன்று வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகில் உள்ள உமாசேகர் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.  அரிமா சங்க தலைவர் எ.சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் வி.சந்திரசேகரன் வரவேற்றார்.  எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் கே.ஆர்.ஜான் முன்னிலையில் 70 ஆண்களுக்கும், 60 பெண்களுக்கும், மகப்பேறு, குழந்தைகள் கண்,காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல், பல் ஆகியவைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.  32 பேருக்கு கண் அறுவைசிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டனர்.  அரிமா சங்க பொருளாளர் இ.பழனி நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.