Disqus Shortname

உத்திரமேரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பேரணி

உத்திரமேரூர் 19/02/2020
உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு மற்றும் போதை ஒழிப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு மாணவர்கள் மாரத்தன் மற்றும் மாணவியர்கள் பேரணி  நிகழ்ச்சியும் நடந்தது. மாரத்தன் போட்டியானது கல்லூரி வளாகத்தில் துவங்கி பருத்திக்கொள்ளை, அ.பி.சத்திரம், அண்ணா நகர், செல்லம்மாள் நகர். நல்லூர், உத்திரமேரூர் பஜார் வீதி வழியே சென்று பதாகைகள் ஏந்தியவாறு ஓடியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேப்போல் கல்லூரி மாணவியர்கள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே துவங்கி பெரிய நாராசம் பேட்டைத் தெரு, திருமலையாப் பிள்ளைத் தெரு, பஜார் வீதி, சன்னதித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும்,
விழிப்புணர்வு வாசனங்கள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். மாரத்தான் மற்றும் பேரணியினை கல்லூரி முதல்வர் சிசிலி துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் லதா, காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம், துணை முதல்வர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பரத் அனைவரையும்
வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments