Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலையை அகற்றக் கோரி ஆர்பாட்டம்

உத்திரமேரூர் 10/02/2020 
உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோல் பதப்படுத்தும்  தொழிற்சாலை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையானது மலையாங்குளம்  புத்தளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு  மத்தியில் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் தோல் பதப்படுத்துவதற்காக ரசாயனப்  பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது இந்த ரசயன கழிவுகள் நீர்வரத்து கால்வாயில் கலப்பதால்  கிராம மக்கள் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதி ஏற்பட்டு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இத் தொழிற்ச்சாலையில்  இருந்து வெளிவரும் ரசாயனக் கழிவு அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தினை வெகுவாக பாதிக்கிறது. இதனால் விவசாயம் பாதிப்பதுடன் கால்நடைகள் மற்றும் பொது மக்கள் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்சாலையினை அகற்றக் கோரி கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்    உத்திரமேரூர் அடுத்த தாலுக்கா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மக்கள்  ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் செல்வசேகர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் டேவிட் செல்லப்பா, தே.மு.தி.க. நிர்வாகி இளையபெருமாள், பகுஜன் சமாஜ்  கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கவி, துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர். இதில் தனியார் தோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments