Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் உறுதிமொழி ஏற்பு மற்றும் மரம் நடு விழா

உத்திரமேரூர் 26/01/2020
உத்திரமேரூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அங்கீகார உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர்  பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களை பாதுகாப்பேன், தண்ணீரை வீணாக்காமல் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்திடுவேன், மின்சாரத்தினை சேகரிப்பேன், சுற்றுசூழலை பாதுகாக்க மரம் வளர்ப்பேன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், வீட்டில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவேன், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வேன், மாற்றத்திற்காக நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நாட்டிற்காக நான் செய்யும் பணி என்று நான் உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் பயனடைந்த பயனாளிகள் வீடுகளில் செயல் அலுவலர் லதா ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளின் வீடு மற்றும் நீர்நிலைகளை சுற்றி மரக்கன்று நட்டு வைத்து மரநடுவிழவினை துவக்கி வைத்தார். இதில் சுமார் 750 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments