Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் பி.டி.ஓ திடீர் ஆய்வு

 உத்திரமேரூர் 22/01/2020
உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையானது மலையாங்குளம் புத்தளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் தோல்  பதப்படுத்துவதற்காக ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது இந்த ரசயன கழிவுகள் நீர்வரத்து கால்வாயில் கலப்பதால் கிராம மக்கள் தோல் நோய் உள்ளிட்ட வியாதி ஏற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இத் தொழிற்ச்சாலையில். இருந்து வெளிவரும் ரசாயனக் கழிவு அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தினை வெகுவாக பாதிக்கிறது. இதனால் விவசாயம் பாதிப்பதுடன் கால்நடைகள் மற்றும் பொது மக்கள் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்சாலையினை அகற்றக் கோரி கிராமமக்கள் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் கடந்த வாரம் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் தொழிற்சாலைக்கான ஆவணங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் பொது மக்களிடம் கூறுகையில் மாவட்ட நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என உறுதியளித்தார்.

No comments