Disqus Shortname

உத்திரமேரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் துவக்கம்

உத்திரமேரூர் 02/02/2020
உத்திரமேரூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் குடியுரிமைச் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் கையெழுத்து இயக்கம் துவங்கியது. உத்திரமேரூர் அண்ணா சிலை அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பஜார் வீதி வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு குடியுரிமை திருத்த சட்ட பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். பின்னர் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்  ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு  உறுப்பினர் நாகன், விவசாய அணி ஏழுமலை, சுப்பையா, கோபாலகிருஷ்ணன் சசிகுமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர்  க.சுந்தர் எம்.எல்.ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் கையெழுத்து
இயக்கத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் போது ம.தி.மு.க, வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள்
கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பு தெரிவித்து விளக்கஉரையாற்றினர். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

No comments