Disqus Shortname

உத்திரமேரூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

உத்திரமேரூர், பிப் 18
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுதியம் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒன்றிய தலைவர்  சி.எல்.ராணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜே.தாமஸ், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட குறைந்த  பட்ச பென்ஷன் ரூ.7850 யை வழங்கிட வேண்டும், அகவிலைபடி, மருத்துவப்படிகளை  வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50,000 மற்றும் ஈம சடங்கு நிதி ரூ 25,000 ஐயும் வழங்க வேண்டும், இலவச பஸ் பாஸ் மற்றும் ஒய்வு பெற்ற  ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் சலுகைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுருத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதிய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

No comments